சென்னையில் இன்று தங்கம் விலை சரிவு – சவரனுக்கு ரூ.320 குறைவு
சென்னை, 23 ஜூன் (ஹி.ச.) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 23) மீண்டும் குறைந்துள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.320 குறைந்து ரூ.1,08,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.13,560 ஆக நிர்ணய
தங்கம்


சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 23) மீண்டும் குறைந்துள்ளது. ஒரு சவரன்

(8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.320 குறைந்து ரூ.1,08,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.13,560 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலையில் அதிரடி சரிவு ஏற்பட்ட நிலையில், சவரனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கும், கிராமுக்கு ரூ.380 குறைந்து ரூ.13,570-க்கும் விற்பனையானது. பின்னர் சனிக்கிழமை சவரனுக்கு ரூ.240 உயர்ந்தது.

நேற்று (திங்கள்கிழமை) விலையில் மாற்றமின்றி இருந்த நிலையில், இன்று மீண்டும் சரிவு பதிவாகியுள்ளது.

இதனிடையே, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2.50 லட்சமாக விற்பனையாகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P