தென்காசி அருகே கார் மரத்தின் மீது மோதி கோர விபத்து - இரு குழந்தைகள், முதியவர் உட்பட 3 பேர் பலி
தென்காசி, 23 ஜூன் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது இன்று அதிகாலை கார் நிலைதடுமாறி மரத்தின் மீது மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் முதியவர் ஒருவர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலே
தென்காசி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து கோர விபத்து - இரு குழந்தைகள், முதியவர் உட்பட 3 பேர் பலி


தென்காசி, 23 ஜூன் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது இன்று அதிகாலை கார் நிலைதடுமாறி மரத்தின் மீது மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் முதியவர் ஒருவர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கார் சிவகிரி டோல் கேட் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி அருகில் இருந்த வயலில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் காரினுள் இருந்த 5 பேரில் வேலுச்சாமி (51), ஹரிகைலாஷ் மற்றும் கீர்த்தி ஆகிய மூவர் நீண்ட நேரம் உயிருக்கு போராடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் காரில் பயணித்த முனியாண்டி மற்றும் வசந்த் ஆகிய இருவர் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகிரி போலீசார், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b