Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 23 ஜூன் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மலர்விழி (45), தனியார் கல்லூரியில் நூலக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று இரவு கோவை மாவட்டம் ஈஷா யோகா மையத்திற்கு வந்துள்ளார்.
அங்கு ஆதியோகி சிலை, தியானலிங்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வழிபாடு மற்றும் தியானத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, யோகா மைய வளாகத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்ற மலர்விழி, தன்னிடம் வைத்திருந்த விஷத்தை அருந்தியதாக தெரிகிறது.
சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்ததை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆலந்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மலர்விழியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க முயன்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஆலந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam