Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை ,23 ஜூன் (ஹி.ச.)
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மும்பை நோக்கி வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சம்பவத்தன்று பாங்காக்கில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு பயணியின் டிராலி பையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த பாக்கெட்டுகளை திறந்து பார்த்ததில், அதில் உயர் ரக கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மொத்தம் 2 கிலோ 272 கிராம் எடையுள்ள, சுமார் ரூ.2 கோடி 27 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் டெல்லியைச் சேர்ந்த பால்தாரி மான் (42) என்பது தெரியவந்தது.
கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA