கத்தார் தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட பலர் உயிரிழப்பு - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆழ்ந்த இரங்கல்
புதுடெல்லி , 23 ஜூன் (ஹி.ச.) கத்தாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட பலர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்
Minister Jaishankar expresses deep condolences.


புதுடெல்லி , 23 ஜூன் (ஹி.ச.)

கத்தாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட பலர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் தனது ஆழ்ந்த வேதனையையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

கத்தாரின் ராஸ் லஃப்பான்

(Ras Laffan) தொழிற்பேட்டையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் இந்தியக் குடிமக்கள் உட்பட பலர் உயிரிழந்தது மற்றும் காயமடைந்தது குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

கூடுதல் விவரங்கள் தெரியவரும் நிலையில், எங்கள் தூதரகம் கத்தார் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அத்துடன், இந்தத் துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இந்தியக் குடிமக்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொள்ளப்படும் என வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த எதிர்பாராத பேரிடர், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b