Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 ஜூன் (ஹி.ச.)
நீட் (NEET-UG) மறுதேர்வை முன்னிட்டு கேள்வித்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு கடந்த வாரம் இந்தியா முழுவதும் டெலிகிராம் செயலிக்கு தற்காலிகத் தடை விதித்திருந்தது.
இந்த தடை ஜூன் 22 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்காலிகத் தடை காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் டெலிகிராம் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இதனால் கோடிக்கணக்கான பயனர்கள் மீண்டும் செயலியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
நீட் தேர்வு தொடர்பான மோசடி வலையமைப்புகள் மற்றும் போலி கேள்வித்தாள் பரப்புதலுக்கு டெலிகிராம் தளம் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்த அவசர நடவடிக்கையை மேற்கொண்டது.
டெலிகிராம் நிறுவனம் இந்தத் தடைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியிருந்தாலும், தேர்வு நேர்மையைப் பாதுகாக்கும் நோக்கில் அரசின் நடவடிக்கை நியாயமானது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
தற்போது சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சில குறிப்பிட்ட அம்சங்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P