Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 23 ஜூன் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரைச் சேர்ந்த குமாரசாமி (59) என்பவர் அரசு பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்துள்ளார்.
இவர், நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியில் அரசு பேருந்தில் பயணம் செய்த மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் புகார் உறுதியானதைத் தொடர்ந்து, குமாரசாமியை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பேருந்துகளில் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN