சியாம பிரசாத் முகர்ஜி நினைவு தினம் - பிரதமர் மோடி அஞ்சலி
புதுடெல்லி , 23 ஜூன் (ஹி.ச.) பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரும், இந்தியாவின் தலைசிறந்த தேசியவாத தலைவர்களில் ஒருவருமான சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினம் (பலிதான் திவஸ்) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு அரசி
A


புதுடெல்லி , 23 ஜூன் (ஹி.ச.)

பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரும், இந்தியாவின் தலைசிறந்த தேசியவாத தலைவர்களில் ஒருவருமான சியாம பிரசாத் முகர்ஜியின் நினைவு தினம்

(பலிதான் திவஸ்) அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,

இந்தியாவின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த சிறந்த தேசபக்தர், அறிஞர் மற்றும் அரசியல் மேதையான சியாம பிரசாத் முகர்ஜிக்கு மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவரது அசைக்க முடியாத உறுதிப்பாடு, பொது வாழ்வில் வெளிப்படுத்திய தைரியம் மற்றும் தேசிய நலனுக்கான அர்ப்பணிப்பு ஆகியவை தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

முகர்ஜியின் தியாகம் நாட்டின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என்றும், அவர் தனது இறுதி மூச்சுவரை போற்றி வளர்த்த இலட்சியங்களின் வழிகாட்டுதலின்படி வலுவான, பாதுகாப்பான மற்றும் முழுமையாக வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA