சிவகிரி அருகே கார் கவிழ்ந்து விபத்த - 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி
தென்காசி, 23 ஜூன் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கொல்லம்–திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ஐந்து பேர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ள
விபத்து


தென்காசி, 23 ஜூன் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கொல்லம்–திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில்

உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ஐந்து பேர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காரில் பயணித்தவர்களில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த 2 பேரை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

நள்ளிரவில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam