குரூப்-1 தேர்வுக்கு ஜூன் 30-இல் இருந்து ஜூலை 29 வரை விண்ணப்பிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, 23 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாடு அரசின் குரூப்-1 நிலையிலான துணை ஆட்சியர் உள்ளிட்ட 26 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி ) சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள
குரூப்-1 தேர்வுக்கு ஜூன் 30-இல் இருந்து ஜூலை 29 வரை விண்ணப்பிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாடு அரசின் குரூப்-1 நிலையிலான துணை ஆட்சியர் உள்ளிட்ட 26 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்

(டிஎன்பிஎஸ்சி ) சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

8 மாவட்டப் பதிவாளர்கள் 1 தொழிலாளர் துறை உதவி ஆணையர் பணியிடம், 12 துணை ஆட்சியர், 2 வணிக வரி உதவி ஆணையர், 3 கூட்டுறவுத் துறை துணை பதிவாளர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-1 தேர்வுக்கு ஜூன் 30-இல் இருந்து ஜூலை 29 வரை விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 6-ஆம் தேதி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டம் (Bachelor's Degree) பெற்றிருக்க வேண்டும்.தமிழில் போதுமான அறிவு இருக்க வேண்டும்.

அனைத்துப் பிரிவினருக்கும் (பொது): குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது 32 வரை இருக்கலாம்.

எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி மற்றும் ஆதரவற்ற விதவைகள்: குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது 37 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்வு (Prelims): 300 மதிப்பெண்களுக்குக் கொள்குறி வகை (Objective type) தேர்வு. இது முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற மட்டுமே பயன்படுகிறது.

முதன்மைத் தேர்வு (Mains): விரிவாக எழுதும் முறை (Descriptive type). இதில் பொது அறிவு (General Studies) மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற தாள்கள் இடம்பெறும்.

நேர்முகத் தேர்வு (Interview): 100 மதிப்பெண்கள். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதித் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தேர்வுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் கால அட்டவணையை அறிய டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b