Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 23 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றும் நாளையும், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
25ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும், ஜூன் 26ஆம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் கனமழை வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P