Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 23 ஜூன் (ஹி.ச.)
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 8 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து காவல் நிலையம் அருகே 9 லாரிகளையும் கடந்த சில தினங்களாக நிறுத்தி வைத்துள்ளனர், தற்போது லாரிகளில் இருந்த பேட்டரிகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருவண்ணாமலையில் கடந்த இரண்டு மாதங்களாக மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தியதாக காவல்துறையினர் லாரியை பிடித்து வழக்கு பதிவு செய்துள்ளனர், அப்படி வழக்கு பதிவு செய்யப்பட்ட 8 லாரிகளில் 6 லாரிகளிலிருந்து பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
குறிப்பாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் வழக்கு பதிவு செய்து கிரிவலப் பாதையில் 24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் காவல்துறையின் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடத்திற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வாகனங்களில் இருந்தும் பேட்டரிகள் திருடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN