ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலுரை
தமிழ்நாடு, 23 ஜூன் (ஹி.ச.) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலுரை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது தேசிய முதலமைச்சர் விஜய், எதிர்த்து பேசினால்தான் எதிர்க்கட்சி என்று நிரூபிக்க ம
ப


தமிழ்நாடு, 23 ஜூன் (ஹி.ச.)

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலுரை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது தேசிய முதலமைச்சர் விஜய்,

எதிர்த்து பேசினால்தான் எதிர்க்கட்சி என்று நிரூபிக்க முடியும் என நினைத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு வணக்கமும் நன்றியும்.

ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து CM ஆன மாதிரி இமேஜ் கிரியேட் பண்றாங்க.

நான் அப்படியே ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதல்வரானதுபோல் சிலர் பேசுகின்றனர்; என்னுடைய வெற்றிக்கு நான் மட்டுமே காரணம் அல்ல; மக்களின் அன்பும், அரவணைப்பும்தான் காரணம்.

1990ஆம் ஆண்டுகளில் ரசிகர் மன்றமாக இருந்தபோதே மக்களுக்கு துணையாக நின்றோம்.

நான் நடித்த திரைப்படங்களில் ஊழல் எதிர்ப்பு, சமூகநீதி, கல்வி பற்றி பேசினேன்.

அரசியல் பற்றி பேசியதாலேயே நமது படங்கள் சந்தித்த, இதுவரை சந்திக்கும் பிரச்சினைகள் எல்லோருக்கும் தெரியும்.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியவுடனேயே சிஏஏ திட்டத்தை எதிர்த்து அறிக்கை கொடுத்தோம்-முதல்வர் விஜய்.

பெரியாரின் கொள்கைகளில் ஏற்புடையதை மற்றுமே ஏற்றுக் கொண்டோம்; பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை.

அரசியல் கட்சி தொடங்கிய உடன் இரு பெண் ஆளுமைகளை கொள்கை தலைவர்களாக அறிவித்த ஒரே கட்சி த.வெ.க.

தவெகவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பதையும் வெளிப்படையாக அறிவித்தோம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை கொள்கையாக அறிவித்துதான் அரசியலுக்கே வந்தோம் கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்பதை வெளிப்படையாக அறிவித்தோம் - முதல்வர் விஜய்

கரூர் சம்பவத்தில் 41 பேரை இழந்த வேதனையை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை; நம் மனதை விட்டு என்றும் அந்த வலியும் வேதனையும் நீங்காது

நம்ம மேலேயே பழி போட்ட கொடுமையெல்லாம் வேற

லெவல் - சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேச்சு.

தமிழக கஜானா திசை மாறிச் சென்றுள்ளது, ஓய்ந்து போயுள்ளது.. தவெக அமைச்சர்களுக்கு ஊழல் செய்யத் தெரியாது.

ஒரு குடும்பம் முக்கியமல்ல; தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்பதை சொல்லும் ஆட்சி இது.

100% தூய்மையான ஆட்சிதான் என்பதையே இலக்காக கொண்டு ஆட்சி செய்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Hindusthan Samachar / Durai.J