கல்வி நிறுவனங்களில் அரசியல் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும் - வி.கே. சசிகலா வலியுறுத்தல்
சென்னை, 23 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் அரசியல் நடவடிக்கைகள் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் அமையக் கூடாது என வி.கே. சசிகலா எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், காஞ்ச
Sasikala


Jh


சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் அரசியல் நடவடிக்கைகள் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் அமையக் கூடாது என வி.கே. சசிகலா எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில்,

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு பள்ளி வகுப்பறைக்குள் தவெக நிர்வாகிகள் நுழைந்து, தமிழக முதல்வரின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு மாணவர்களிடம் பாடம் எடுத்ததாக வெளியாகும் வீடியோக்கள் மற்றும் செய்திகள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்பதால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.

அதேபோல், மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற அரசு பள்ளி நிகழ்ச்சியில் அமைச்சர் ஒருவர் மாணவர்கள் முன்னிலையில் மேடையில் நடனமாடிய சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது மாணவர்களுக்கு எந்தவித பயனையும் அளிக்காது என்றும், இத்தகைய செயல்கள் தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டபோது, தவெக கட்சியின் பிரச்சார பாடல் ஒலிபரப்பப்பட்டதாக கூறப்படும் நிகழ்வையும் குறிப்பிட்ட அவர், கல்வி நிறுவனங்களில் அரசியல் விளம்பர நடவடிக்கைகளை அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மாணவர்களை கட்சி கூட்டங்களுக்கு அழைத்துச் சென்ற சம்பவங்களை தாம் அப்போதே விமர்சித்ததாகவும், மாணவர்களின் கல்வி சூழலை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது தவறு என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களின் கல்விக்கு இடையூறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ள அவர், பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களை சீரமைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ