Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 23 ஜூன் (ஹி.ச)
புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்களுக்கு நாளை முதல் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் நிலவிய சீற்றம் மற்றும் பலத்த காற்று காரணமாக மீனவர்களின் பாதுகாப்பு கருதி கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி தற்போது காற்றின் வேகம் குறைந்து கடல் சீரான நிலைக்குத் திரும்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.
அனுமதி கிடைத்ததை அடுத்து மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளையும், வலைகளையும் கடலுக்குச் செல்ல தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடனும், வானிலை எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டும் செல்ல வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b