Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூன் (ஹி.ச)
முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனுப்பப்பட்ட கோப்புகளுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளதாக மின்சாரம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில்,
இரு முன்னாள் அமைச்சர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அனுமதி கோரும் கோப்புகள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. அரசியல் உள்நோக்கத்துடனேயே கோப்புகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு விஷயத்திலும் தனக்கான ஆதாயம் இல்லாமல் பாரதிய ஜனதா கட்சி செயல்படாது. ஆளுநர் மூலமாக மாநில அரசின் நிர்வாகப் பணிகளில் தலையீடு செய்வதும், முக்கிய கோப்புகளை நிறுத்தி வைப்பதும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு.
அரசு நிர்வாகத்தில் ஆளுநரின் இத்தகைய தலையீடு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளை முடக்கும் முயற்சி .
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b