திருச்செந்தூர் கோயிலில் பல்வேறு சேவை கட்டணங்கள் இரு மடங்காக உயர்வு - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருச்செந்தூர், 23 ஜூன் (ஹி.ச.) முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு முக்கிய சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
service charges at the Tiruchendur temple


திருச்செந்தூர், 23 ஜூன் (ஹி.ச.)

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு முக்கிய சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பக்தர்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை பெருக்கும் வகையில் இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்படுவதாக நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள தங்க ரத உலா சேவைக்கான கட்டணம் ரூ.2,500ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட உள்ளது.

அதேபோல், கோயிலின் நிரந்தர வைப்பு நிதிக்கான குறைந்தபட்ச தொகை ரூ.50,000ல் இருந்து ரூ.1 லட்சமாக இரு மடங்காக அதிகரிக்கப்படுகிறது.

மேலும், சிறப்பு வழிபாடான ஷண்முக அர்ச்சனைக்கான கட்டணம் ரூ.5,000ல் இருந்து ரூ.30,000 ஆக கணிசமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு எப்போது முதல் அமலுக்கு வரும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும் என நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதே வேளையில், கட்டண உயர்வு குறித்து பக்தர்கள் மத்தியில் கலவையான கருத்துகள் எழுந்துள்ளன.

Hindusthan Samachar / vidya.b