நடிகர் ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் பணம், வைரச் செயின் மாயம்- 5 பேர் மீது சந்தேகம்
Yesterday news ,
Ravi


சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)

சென்னை நீலாங்கரை சேஷாத்ரி அவென்யூ பகுதியில் உள்ள வாடகை வீட்டில் நடிகர் ரவி மோகன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், வீட்டில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் பணம் மற்றும் ஒரு வைரச் செயின் காணாமல் போனதாக அவரது மேலாளர் கோகுல் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில், நடிகரின் வீட்டில் பணியாற்றி வரும் இரண்டு ஓட்டுநர்கள், ஒரு தனிப்பட்ட உதவியாளர் (பி.ஏ.), ஒரு பணிப்பெண் மற்றும் அவரது மகன் ஆகிய ஐந்து பேர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள நீலாங்கரை காவல்துறையினர், வீட்டில் பணிபுரிபவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சம்பவம் தொடர்பான பிற ஆதாரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல நடிகரின் வீட்டில் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் திரைப்படத் துறையினரிடையிலும், ரசிகர்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ