கள்ளக்குறிச்சியில் லஞ்ச புகார் - காவல் ஆய்வாளர் உட்பட மூவர் ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம்
கள்ளக்குறிச்சி, 24 ஜூன் (ஹி.ச) கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் கலையரசி மற்றும் தலைமைக் காவலர்கள் வேல்முருகன், செந்தில்குமார் ஆகியோர், அப்பகுதி ஏரியில் அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளும் லாரி உரிம
Bribery complaint in Kallakurichi


கள்ளக்குறிச்சி, 24 ஜூன் (ஹி.ச)

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் கலையரசி மற்றும் தலைமைக் காவலர்கள் வேல்முருகன், செந்தில்குமார் ஆகியோர், அப்பகுதி ஏரியில் அனுமதி பெற்று வண்டல் மண் அள்ளும் லாரி உரிமையாளர்களிடம் முறைகேடாக பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றதை அடுத்து, முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, நிர்வாக நடவடிக்கையாக மூவரையும் உடனடியாக மாவட்ட ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்கள் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்ட விவகாரம் போலீசார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையினர் மீதான லஞ்ச புகார்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b