முதல்வர் விஜய் 397 இளைஞர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகள் வழங்குகிறார்
சென்னை, 24 ஜூன் (ஹி.ச) தமிழக முதல்வர் விஜய் இன்று சென்னையில் நடைபெறும் அரசு விழாவில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 379 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இந்த நிகழ்வு இன்று காலை சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங
Vijay is handing over appointment orders to 397 youths today


சென்னை, 24 ஜூன் (ஹி.ச)

தமிழக முதல்வர் விஜய் இன்று சென்னையில் நடைபெறும் அரசு விழாவில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 379 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

இந்த நிகழ்வு இன்று காலை சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.

உதவி பொறியாளர்களுடன் சேர்த்து, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேர்வான 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கும் இதே மேடையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.

அரசுப் பணியிடங்களை விரைந்து நிரப்பும் நோக்கிலும், தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 397 பேர் இன்று அரசுப் பணியில் இணைய உள்ள நிலையில், தேர்வு செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரும் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

பணி நியமனம் பெறுபவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்துரை வழங்கி, அரசுத் துறைகளில் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற அறிவுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b