தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்க எதிர்ப்பு - சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை, 24 ஜூன் (ஹி.ச) தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள மாநகர
தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்க எதிர்ப்பு - சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்


சென்னை, 24 ஜூன் (ஹி.ச)

தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு திரண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தூய்மைப் பணியாளர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாகவும், இதனால் பொதுமக்களுக்கான சேவையின் தரம் பாதிக்கப்படும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

தூய்மைப் பணிகளை மாநகராட்சியே நேரடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி, பணியாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தனியார்மயமாக்கல் கொள்கை தொழிலாளர் விரோதப் போக்கு என்றும், இதனை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி தொண்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b