Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 24 ஜூன் (ஹி.ச.)
செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை
மதுராந்தகம் பகுதியில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வாகனங்கள் வழக்கம்போல் சென்று கொண்டிருந்தன.
அப்போது செங்கல்பட்டு மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த காரை முந்திச் செல்ல முயன்றபோது, பின்னால் வந்த லாரி கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே நின்றது.
இதனைத் தொடர்ந்து பின்னால் வந்த இரண்டு பேருந்துகள், இரண்டு கார்கள் மற்றும் ஒரு லாரி என மொத்தம் ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன.
விபத்தில் வாகனங்கள் சேதமடைந்து சாலையில் நின்றதால் செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எனினும், தொடர் விபத்தால் ஜிஎஸ்டி சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam