திருச்செந்தூர் சிறப்பு தரிசன கட்டணம் உயர்வு இல்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்
சென்னை, 24 ஜூன் (ஹி.ச.) சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதாக பரவி வரும் தகவல்களுக்கு விளக்கம் அளித்தார். இதுகுறித்து, அம
அமைச்சர் ரமேஷ்


சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)

சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதாக பரவி வரும் தகவல்களுக்கு விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து, அமைச்சர் கூறுகையில்,

திருச்செந்தூர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்ததையடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

அதன் ஒரு பகுதியாக, சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் கட்டண மாற்றம் குறித்து அதிகாரிகள் முன்மொழிவு செய்திருந்ததாகவும், அதுதொடர்பாக பொதுமக்களின் கருத்துகள் மட்டுமே கேட்கப்பட்டதாகவும் கூறினார்.

டிக்கெட் கட்டண உயர்வு குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தற்போது கட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

மேலும், பொதுமக்களின் கருத்துகளை மீறி அரசு எந்த முடிவையும் எடுக்காது என்றும், மக்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில்தான் அரசு செயல்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற தகவல்கள் பரவிய நிலையில், அமைச்சர் ரமேஷின் இந்த விளக்கம் பக்தர்களிடையே நிலவிய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam