Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 24 ஜூன் (ஹி.ச.)
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தலைமை தபால் நிலையம், ஒருங்கினைந்த நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மர்ம நபர் இ.மெயில் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகிறார்.
இதுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு 5 முறையும், தலைமை தபால் நிலையத்திற்க்கு 1 முறையும், ஒருங்கினைந்த நீதிமன்றத்திற்க்கு 5 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மீண்டும் இன்று ஒருங்கினைந்த நீதிமன்றத்திற்கு 5 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் வழக்கறிஞர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என அணைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
அதிகார மையங்களுக்கே வெடிகுண்டு விடுத்து வரும் நபரை கைது செய்ய முடியாத அரசால், பொதுமக்களை எப்படி பாதுகாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN