Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 24 ஜூன் (ஹி.ச)
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனலட்சுமியை மோசடி கும்பல் ஒன்று தொடர்புகொண்டு, அவரது பெயரில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாகவும், அதற்காக அவரை ‘டிஜிட்டல் முறையில் கைது’ செய்திருப்பதாகவும் அச்சுறுத்தியுள்ளது.
விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், அதற்கு பிணையாக வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை குறிப்பிட்ட கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் கூறி படிப்படியாக ரூ.74.75 லட்சத்தை பறித்துள்ளனர்.
இது தொடர்பாக தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்ட சரவணகுமார், ஆலன் மார்ட்டின், சாம் பால் உள்ளிட்ட ஐந்து பேர் அடங்கிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் அரசு துறைகள் ஒருபோதும் பணம் கேட்பதில்லை என்றும், இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b