மாமன்ற கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கை வழங்கக் கூடாது - திமுக கவுன்சிலர் பேச்சால் பரபரப்பு
சென்னை, 24 ஜூன் (ஹி.ச) சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு குறித்து திமுக கவுன்சிலர் ஒருவர் நேரம் இல்லா நேரத்தில் பேசிய வார்டு 12 உறுப்பினர் கவி கணேசன், மாமன்ற கூட்டத்தில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்
Hh


சென்னை, 24 ஜூன் (ஹி.ச)

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கேற்பு குறித்து திமுக கவுன்சிலர் ஒருவர்

நேரம் இல்லா நேரத்தில் பேசிய வார்டு 12 உறுப்பினர் கவி கணேசன், மாமன்ற கூட்டத்தில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டல உறுப்பினர்களுக்கே அதிக செல்வாக்கு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், மன்ற உறுப்பினர்களுக்கு இணையாக அமர சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என்ன அதிகாரம் அல்லது செல்வாக்கு உள்ளது என கேள்வி எழுப்பினார்.

அதோடு, மாமன்ற கூட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவோ, அவர்களுக்கு தனியாக இருக்கை வழங்கவோ கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையடுத்து குறுக்கிட்டு பேசிய மேயர் பிரியா, மாமன்ற கூட்டங்களில் பங்கேற்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை இருப்பதாகவும், அவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் என்றும் விளக்கமளித்தார்.

அதேபோல் திமுக வார்டு உறுப்பினர் ஶ்ரீராமலு, கடந்த மாமன்ற கூட்டங்களிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாக சுட்டிக்காட்டி, கவி கணேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் மற்ற உறுப்பினர்கள் தலையிட்டு சமரசம் செய்ததைத் தொடர்ந்து, கவி கணேசன் தனது இருக்கையில் அமர்ந்தார்.

இந்த விவாதம் காரணமாக மாமன்ற கூட்டத்தில் சில நிமிடங்கள் பரபரப்பான சூழல் நிலவியது.

Hindusthan Samachar / P YUVARAJ