ஃபுட் ரிவ்யூ யூடியூபர்களுக்கு தமிழக உணவு பாதுகாப்புத்துறை புதிய அறிவுறுத்தல்
சென்னை, 24 ஜூன் (ஹி.ச.) தமிழகத்தில் உணவகங்களை மதிப்பீடு செய்து காணொளிகள் வெளியிடும் ஃபுட் ரிவ்யூ யூடியூபர்களுக்கு தமிழக உணவு பாதுகாப்புத்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, உணவு பாதுகாப்புத்துறையின் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்
டிபிஎச்


சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)

தமிழகத்தில் உணவகங்களை மதிப்பீடு செய்து காணொளிகள் வெளியிடும் ஃபுட் ரிவ்யூ யூடியூபர்களுக்கு தமிழக உணவு பாதுகாப்புத்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, உணவு பாதுகாப்புத்துறையின் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி செயல்படும் உணவகங்கள் மற்றும் உணவுக் கடைகளுக்கு மட்டுமே சென்று இனி ஃபுட் ரிவ்யூ செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஃபுட் ரிவ்யூ மேற்கொள்வதற்கு முன்பு, அந்த உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் (License) உள்ளதா, விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உணவு தயாரிப்போர் கையுறை, தலையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல், உணவகம் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா, தேவையான சுகாதார வசதிகள் உள்ளனவா, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் தரமானவையா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகத்தின் வெளித்தோற்றம் மற்றும் உள்தோற்றத்தை மட்டும் காட்சிப்படுத்தி ஃபுட் ரிவ்யூ செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார தரநிலைகளை மையமாகக் கொண்டு மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை வலியுறுத்தியுள்ளது.

தமிழக உணவு பாதுகாப்புத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படும் உணவகங்களுக்கே முன்னுரிமை அளித்து ஃபுட் ரிவ்யூ செய்யுமாறு யூடியூபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P