Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது. நேற்று சிறிய அளவில் குறைந்திருந்த தங்கம் விலை, இன்று கணிசமாக சரிந்ததால் நகை வாங்குவோருக்கு சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தக நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து ரூ.13,350 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,680 குறைந்து ரூ.1,06,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.13,560 மற்றும் சவரனுக்கு ரூ.1,08,480 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் சரிவை கண்டுள்ளது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.170 குறைந்து ரூ.11,170 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,360 குறைந்து ரூ.89,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையிலும் சரிவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.240 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.40 லட்சமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள், முதலீட்டாளர்களின் போக்கு மற்றும் உலகளாவிய பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P