பெருங்கனவு நனவானது - இந்திய ஜெர்ஸியை பெற்ற வைபவ் சூர்யவன்ஷி நெகிழ்ச்சி
புது டெல்லி , 24 ஜூன் (ஹி.ச.) ஐ.பி.எல். தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தி
I


புது டெல்லி , 24 ஜூன் (ஹி.ச.)

ஐ.பி.எல். தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணிக்கான ஜெர்ஸியை பெற்றுக்கொண்டுள்ள வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

அவர் இந்திய ஜெர்ஸியை கையில் ஏந்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தேசிய அணியில் தேர்வானது குறித்து வெளியிடப்பட்ட வீடியோவில் பேசிய வைபவ் சூர்யவன்ஷி, ‘‘இந்த உணர்வை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. சிறுவயதில் கிரிக்கெட் பேட்டை கையில் எடுத்துக்கொண்டு பயிற்சிக்காக மைதானத்துக்கு சென்றபோது கண்ட பெருங்கனவு இன்று நனவாகியுள்ளது.

இந்திய டி20 அணியில் கிடைத்துள்ள இந்த வாய்ப்பு, எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனையாகவும் முக்கியமான மைல்கல்லாகவும் உள்ளது என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.

இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA