Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 24 ஜூன் (ஹி.ச.)
ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் புதிதாக திருத்தப்பட்ட பயண வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
தற்போது ஈரானில் சில சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இந்திய குடிமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ஈரானுக்கு அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே ஈரானில் தங்கியிருப்பவர்கள் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டியவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
பிராந்திய பாதுகாப்பு சூழலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையான தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P