Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 24 ஜூன் (ஹி.ச)
தமிழ்த் திரையுலகின் இசை மற்றும் இலக்கிய வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, மக்கள் நீதி மய்யத் தலைவர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்த் திரையிசையின் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த கவியரசுக்கும் மெல்லிசை மன்னருக்கும் இன்று பிறந்த நாள்.
ஒரு பாடலின் உயிரும் உடலுமாக இரு துருவங்கள் இணைந்து பயணிக்க முடியும் என்பதன் வரலாற்றுச் சாட்சியாக ஒலித்தவர்கள் கண்ணதாசனும் எம்.எஸ். விஸ்வநாதனும். அந்த மாமேதைகளை இந்நாளில் மனம் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்படப் பாடல்களுக்கு இலக்கியச் செழுமையையும், இனிமையான இசையையும் வழங்கிய கண்ணதாசன் – எம்.எஸ்.வி. கூட்டணி, பல தலைமுறைகளைக் கடந்தும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் தெரிவித்துள்ள இந்த நினைவஞ்சலி, தமிழ் இசை ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ