Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)
கவியரசு கண்ணதாசன்
தமிழின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவராகவும், தமிழ்க் கலைத்துறையின் ஈடு இணையற்ற தத்துவப் பாடலாசிரியராகவும் விளங்கியவர்.
அவரது எளிய மற்றும் ஆழமான வரிகள் பாமர மக்கள் முதல் அறிஞர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவை ஆகும்
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற கவியரசு கண்ணதாசன் 1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தார்.
இவரின் இயற்பெயர் முத்தையா.
காரை முத்துப்புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகியவை இவருடைய புனைப்பெயர்கள் ஆகும்.
சென்னைக்கு வந்து பத்திரிகை உலகிற்குள் நுழைந்த போது, 'கண்ணனுக்கு தாசன்' என்ற பொருளில் 'கண்ணதாசன்' என புனை பெயர் சூட்டிக்கொண்டார்.
5,000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை இயற்றி, தமிழர்களின் உணர்வுகளுக்குத் தன் வரிகளால் வடிவம் கொடுத்தார்.
4,000-க்கும் மேற்பட்ட கவிதைகள், 'அர்த்தமுள்ள இந்து மதம்', 'இயேசு காவியம்' போன்ற புகழ்பெற்ற நூல்களை எழுதினார்.
சண்டமாருதம், திருமகள், தென்றல், முல்லை மற்றும் கண்ணதாசன் போன்ற இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தார்
பராசக்தி, ரத்தத்திலகம், கருப்புப் பணம், சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் திராவிட இயக்கத்தில் அண்ணாதுரையுடன் இணைந்து பணியாற்றினார்.
பின்னர் கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார்.
தமிழ்நாட்டின் 'அரசவைக் கவிஞராக' நியமிக்கப்பட்டுப் பெருமைப்படுத்தப்பட்டார்.
சாகித்ய அகாதமி விருது:
இவரது 'சேரமான் காதலி' நாவலுக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.
தேசிய விருது:
'குழந்தைக்காக' என்ற திரைப்படத்தில் எழுதிய பாடலுக்காகச் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றார்
ஆழமான வாழ்க்கை ரகசியங்களை தன்னுடைய எளிமையான வரிகள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்த கவியரசர் கண்ணதாசன் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு1981ஆம் ஆண்டு,அக்டோபர் 17அன்றுகாலமானார்.
இவரது உடல் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, லட்சக்கணக்கான மக்களின் கண்ணீருடன் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
Hindusthan Samachar / Durai.J