தமிழ் உள்ளவரை கண்ணதாசனின் புகழ் நிலைத்திருக்கும் – கவியரசின் நூற்றாண்டில் முதல்வர் விஜய் புகழாரம்
தமிழ்நாடு, 24 ஜூன் (ஹி.ச.) தமிழ் இலக்கிய உலகிலும், தமிழ்த் திரையிசை வரலாற்றிலும் அழியாத முத்திரை பதித்த கவியரசு கண்ணதாசன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்
விஜய்


தமிழ்நாடு, 24 ஜூன் (ஹி.ச.)

தமிழ் இலக்கிய உலகிலும், தமிழ்த் திரையிசை வரலாற்றிலும் அழியாத முத்திரை பதித்த கவியரசு கண்ணதாசன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

மனித வாழ்வின் உணர்வுகள், தத்துவச் சிந்தனைகள் மற்றும் சமூக விழிப்புணர்வுகளை எளிய தமிழில் தனது படைப்புகள் மூலம் மக்களிடம் கொண்டு சென்றவர் கவியரசு கண்ணதாசன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்த அவரது படைப்புகள் காலங்களைக் கடந்தும் தலைமுறைகளை வழிநடத்தும் இலக்கியப் பொக்கிஷங்களாக திகழ்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழி உள்ளவரை கவியரசர் கண்ணதாசனின் புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் என முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam