Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 24 ஜூன் (ஹி.ச.)
மதுரை மாநகர் எஸ்.ஆலங்குளம் பாரதிபுரம் 8 ஆவது தெரு பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரி என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் கடைக்கு மது போதையில் சென்ற ஆலங்குளம் பகுதியை சேர்ந்த அஜித் பிரபு, ஹரிஹரன், சரவணன் ஆகிய மூன்று இளைஞர்கள் மது குடிக்க Snacks வாங்கி விட்டு பணம் கேட்டபோது பணம் தர முடியாது என கூறி கடையை அடித்து நொறுக்கி உள்ளனர்.
பின்னர் மாரீஸ்வரியின் கழுத்தில் இருந்த வெள்ளி செயினை பறித்து விட்டு தப்பியோடி உள்ளனர்.
இதுகுறித்து மாரீஸ்வரி அளித்த புகாரின் கீழ் மூன்று பேரை கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைது செய்து உள்ளனர்.
மதுரையில் மது போதையில் ஓசியாக SNACKS கேட்டு பெண்ணிடம் தகராறு ஈடுபட்ட நபர்களால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN