Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டல அலுவலகங்களிலும் தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என சென்னை மேயர் பிரியா அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையருக்கு அவர் விடுத்துள்ள அறிவுரையில்,
மண்டல அலுவலகங்களில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை கட்டாயம் இடம் பெறச் செய்ய வேண்டும்.
இதற்கான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை உடனடியாக அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அரசின் திட்டங்கள் மற்றும் மக்கள் நலப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், முன்னாள் முதல்வரின் படத்தை அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைப்பது வழக்கமான நடைமுறை என்பதால், இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேயரின் இந்த அறிவுரையைத் தொடர்ந்து, ஆணையர் அலுவலகம் சார்பில் சுற்றறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
விரைவில் அனைத்து 15 மண்டல அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படம் வைக்கும் பணிகள் முடுக்கிவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b