Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 24 ஜூன் (ஹி.ச)
கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் குரியன், மத்திய சிறுபான்மையினர் நலன், மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி ஆவர்.
மேலும்,பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராவார்.
சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 3-வது ஆட்சிக் காலத்தில் அவருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது.
இதற்காக அவர் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் கடந்த 21-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால், மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.
அதன்படி தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பியிருந்தார்.
அந்த ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி மாளிகை செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், மத்திய உணவு பதப்படுத்தல் துறை இணை மந்திரி ரவ்நீத் சிங் பிட்டுவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலமும் முடிவடைந்துள்ளது.
இருப்பினும் அவர் இன்னும் மந்திரி பதவியை ராஜினாமா செய்யவில்லை.
அவர் பதவியில் தொடர்வாரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
மத்திய மந்திரிசபை விரைவில் விரிவாக்கம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஜார்ஜ் குரியனின் ராஜினாமா அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனால் மத்திய மந்திரிசபையில் விரைவில் மாற்றங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA