ஜூன் 26-ல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவு செயல்படாது
புதுச்சேரி, 24 ஜூன் (ஹி.ச.) மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜூன் 26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஜிப்மர் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு (OPD) செயல்படாது என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குற
Jipmer


புதுச்சேரி, 24 ஜூன் (ஹி.ச.)

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜூன் 26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஜிப்மர் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு (OPD) செயல்படாது என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

மத்திய அரசின் பொது விடுமுறை நாளான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, ஜூன் 26 அன்று ஜிப்மர் மருத்துவமனையின் அனைத்து வெளிநோயாளிகள் பிரிவுகளும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே, அன்றைய தினம் வெளிப்புற நோயாளிகள் சேவையை பயன்படுத்த திட்டமிட்டுள்ள நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்குமாறு ஜிப்மர் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

அதே நேரத்தில், அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் அவசர மருத்துவ சேவைகள் வழக்கம் போல் எந்த வித தடையும் இன்றி செயல்படும் என்றும் ஜிப்மர் நிர்வாகம் தெளிவுபடுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN