தலைமைச் செயலகத்தில் டிஜிட்டல் மனு பெறும் கருவி - அமைச்சர் ராஜ்மோகன் புதிய முயற்சி
சென்னை, 24 ஜூன் (ஹி.ச.) சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனின் அலுவலக அறைக்கு வெளியே பொதுமக்களின் மனுக்களை டிஜிட்டல் முறையில் பெறும் புதிய கருவி நிறுவப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், குறைகள் மற்றும் தேவைகள் தொடர்பான மனுக்களை
ராஜ்மோகன்


சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனின் அலுவலக அறைக்கு வெளியே பொதுமக்களின் மனுக்களை டிஜிட்டல் முறையில் பெறும் புதிய கருவி நிறுவப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், குறைகள் மற்றும் தேவைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக பதிவு செய்யும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மனுக்களை விரைவாக சமர்ப்பிப்பதோடு, அவற்றின் தற்போதைய நிலை குறித்த தகவல்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர் சந்திப்பதற்கான அப்பாயின்மெண்ட் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை தொலைதூரத்தில் இருந்தபடியே மனுதாரர்கள் தெரிந்து கொள்ளும் வசதியும் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ளது.

பொதுமக்களுக்கு அரசு சேவைகளை எளிமையாகவும், விரைவாகவும் வழங்கும் நோக்கில் இந்த டிஜிட்டல் மனு பெறும் கருவி நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய நடைமுறை நிர்வாக சேவைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam