சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம் - இன்று 6 ரயில்கள் முழுமையாக ரத்து
சென்னை, 24 ஜூன் (ஹி.ச.) சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பராமரிப்பு பணிகள் காரணமாக இரவு நேர ரயில்கள் சில ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித
Sudden change in Chennai Beach–Tambaram suburban train services


சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)

சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பராமரிப்பு பணிகள் காரணமாக இரவு நேர ரயில்கள் சில ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி இரவு 11.20, 11.40 மற்றும் 11.59 மணிக்கு புறப்பட இருந்த மின்சார ரயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

அதேபோல, மறுமார்க்கத்தில் கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 9.40, 10.15 மற்றும் 11.00 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும் இன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு, மாற்று போக்குவரத்து வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாளை முதல் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு பயணிகள் ரயில் நிலைய அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b