அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் – அமைச்சரிடம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை
மதுரை , 24 ஜூன் (ஹி.ச.) பள்ளிக்கல்வி தமிழ் அபிவிருத்தி தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவரை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் மகாலிங்கம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும்
A


மதுரை , 24 ஜூன் (ஹி.ச.)

பள்ளிக்கல்வி தமிழ் அபிவிருத்தி தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவரை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் மகாலிங்கம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளின் உயர்கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, உசிலம்பட்டி பகுதியில் புதிய அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினார்.

இந்தப் பள்ளி அமைக்கப்பட்டால், கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள் உயர்கல்வியை எளிதில் தொடரும் வாய்ப்பு ஏற்படும் என்றும், பெண்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு இது பெரும் துணையாக அமையும் என்றும் சட்டமன்ற உறுப்பினர் விஜய் மகாலிங்கம் அமைச்சரிடம் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA