முதல்வர் நடிக்க வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் செங்கோட்டையன் பதில்
சென்னை, 24 ஜூன் (ஹி.ச.) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டப்பேரவை விவாதங்கள் மற்றும் தனியார் பள்ளிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்தார். சட்டப்ப
செங்கோ


சென்னை, 24 ஜூன் (ஹி.ச.)

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டப்பேரவை விவாதங்கள் மற்றும் தனியார் பள்ளிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் நடிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

முதலமைச்சர் நடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மக்களுக்காக பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

மேலும், முதலமைச்சர் ஏன் பேசவில்லை என்று அனைவரும் கேட்டு வந்த நிலையில், அவர் பேசத் தொடங்கியதும் திமுக உறுப்பினர்கள் திணறி வெளிநடப்பு செய்ததாகவும் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் தனியார் பள்ளிகளிடம் கட்சி நிதி பெறப்பட்டதாக எழுந்த கேள்விக்கு,

அத்தகைய குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்றும், அதற்கான ஆதாரங்கள் இருந்தால் நிரூபிக்குமாறும் அமைச்சர் சவால் விடுத்தார்.

தனியார் பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கும் பணியில் தனது காலத்தில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட்டதாக கூறிய அவர், 219 பள்ளிகளுக்கு பல்வேறு முகாம்கள் மூலம் நேரடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் கட்சி நிதி பெறப்பட்டதாக தனியார் பள்ளி அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு,

யார் அந்த கருத்தை தெரிவித்தனர் என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறிய அமைச்சர், சம்பந்தப்பட்ட பேட்டியை காண்பித்த பின்னரே அதுகுறித்து பதிலளிக்க முடியும் என்றார்.

மேலும், தனியார் பள்ளிகளுக்கு இரண்டு முறை இலவசமாக NOC வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P