Enter your Email Address to subscribe to our newsletters

காட்பாடி, 24 ஜூன் (ஹி.ச)
வேலூர் மாவட்டம்
காட்பாடி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த அந்த பெண் மருத்துவர், பள்ளி மாணவர்கள் விடுப்பு மற்றும் பிற தேவைகளுக்காக மருத்துவ சான்றிதழ் கேட்டு வந்தபோது, ஒவ்வொரு சான்றிதழுக்கும் ரூ.900 லஞ்சமாக கேட்டுள்ளார்.
இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாணவர் ஒருவருக்கு மருத்துவ சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.900 லஞ்சம் பெற்றபோது, அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து மருத்துவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மருத்துவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசு ஊழியர் ஒருவர் மாணவர்களிடமே லஞ்சம் வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ சான்றிதழ்கள் போன்ற அடிப்படை சேவைகளுக்கு லஞ்சம் கேட்பது கண்டிக்கத்தக்கது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b