பலாப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியம் நன்மைகள்?
சென்னை, 23 ஜூன் (ஹி.ச.) தமிழர்கள் கொண்டாடும் முக்கனிகளில் ஒன்றாக, தனி சிறப்பு கொண்டது பலா. இதன் வாசம் கடந்துபோகும் போதே அதனை சாப்பிடத் தூண்டும். பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, ஏ,பி,சி வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்
பலாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்!!!!


சென்னை, 23 ஜூன் (ஹி.ச.)

தமிழர்கள் கொண்டாடும் முக்கனிகளில் ஒன்றாக, தனி சிறப்பு கொண்டது பலா. இதன் வாசம் கடந்துபோகும் போதே அதனை சாப்பிடத் தூண்டும். பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, ஏ,பி,சி வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. பலாவின் இலை, காய், பழம், விதை, பால், வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

இந்த ஆண்டு பலா சீசன் தொடங்கிவிட்ட நிலையில், சந்தையில் பலாப்பழங்கள் குவிந்து கிடைக்கின்றன.

பலாப்பழம் சுவையானது மட்டுமல்லாமல் அதில் உடலுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய பல விதமான நன்மைகள் அடங்கியிருக்கின்றன.

வெளிநாட்டிலிருந்து பலாப்பழத்திற்கு ஏராளமான வரவேற்பு உள்ளதாகவும், பலாப்பழம் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமடைந்து உள்ளதாகவும் பலரும் தெரிவித்துள்ளனர்.

பலாப்பழத்தின் வர்த்தகம் பன்மடங்கு வளர்ந்துள்ளது.. ஒரு பலாப்பழம் என்பது சுமார் 5 கிலோ எடை உள்ளதாக இருக்கிறது. இது ஒரு மஞ்சள் நிறத்திலான சதை கொண்டதாக இருக்கிறது.

கேக் ஐஸ்கிரீம் பழச்சாறு சிப்ஸ் போன்ற பல வகைகளில் இந்த பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுகிறார்கள். இதை வைத்து குழம்பு வகைகளையும் செய்து சாப்பிடுகிறார்கள். பலாப்பழத்தின் கொட்டையை சாம்பாரில் போடும் அளவிற்கு நம்மூரில் இதை உபயோகம் செய்கிறார்கள்.

பலாப்பழத்தில் ரத்தத்தில் உள்ள காரணி, சர்க்கரையை சீராக வைக்க உதவுகிறது. மேலும் பலவிதமான நன்மைகள் இதில் நிறைந்துள்ளனm இது குறைந்த கிளைசீமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.

மேலும் நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது. நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். நார்சத்து ரத்த சர்க்கரை அதிக அளவு வளராமல் பாதுகாக்கிறது.

இவை அனைத்தும் நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை விளைவிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. பலாப்பழம் என்பது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல மருந்து போன்று இருக்கின்றன என்று பலரும் கூறுகின்றனர்.

பலாப்பழம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது. இதில் விட்டமின் சி, விட்டமின் ஏ, போன்ற சத்துக்கள் உள்ளது. இந்த விட்டமின்கள் ஆனது நமது எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பெருமளவு உதவி செய்கிறது.

இது தவிர, பழத்தின் விதையில் காணப்படும் ஒரு கலவை நியூட்ரோபில்ஸ் எனப்படும் முக்கிய நோயெதிர்ப்பு செல்களை செயல்படுத்துகிறது. இந்த நோயெதிர்ப்பு செல்கள் நமது முதல் பாதுகாப்புக் கோடுகளில் ஒன்றாகும், அவை மற்ற நோயெதிர்ப்பு உயிரணுக்களின் பதிலை அதிகரிக்கின்றன மற்றும் அழற்சி செயல்முறையைத் தொடங்கி மத்தியஸ்தம் செய்கின்றன.

ஆயுர்வேதத்தில் சர்க்கரைநோயை `கபம் மற்றும் மேக தோஷத்தால் ஏற்படக்கூடியது’ என்பார்கள். பலாப்பழம் இந்த தோஷங்களை அதிகரிக்கக்கூடியது என்பதால், சர்க்கரை நோயாளிகள் இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதேநேரத்தில், அஜீரணக்கோளாறு இல்லாத சர்க்கரை நோயாளிகள் எப்போதாவது, ஒன்றிரண்டு சாப்பிடலாம் என்கிறார் ஆயுஷ் நிபுணர்.

Hindusthan Samachar / Dr. Vara Prasada Rao PV