Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 24 ஜூன் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் செல்லூர் அஹிம்சாபுரம் 6 ஆவது தெரு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சொக்கிகுளம் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் செலுத்துவதற்காக சென்று உள்ளார்
அப்போது அங்கு வெளியில் நின்று கொண்டிருந்த தருமபுரி மாவட்டம் அரூர் எல்லாமுடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த சபரி என்பவர் ஏடிஎம் வேலை செய்யவில்லை, நான் உங்களுக்கு ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி தருகிறேன் எனக் கூறி ரமேஷிடமிருந்து 7000 ரூபாய் பெற்று விட்டு சென்று உள்ளார்.
பின்னர் ரமேஷின் அக்கவுண்டிற்கு பணம் வராத நிலையில் ரமேஷை தொடர்பு கொண்ட போது போன் நம்பரை பிளாக் செய்து விட்டு சென்று உள்ளார்.
இதையடுத்து ரமேஷ் அளித்த புகாரின் கீழ் தல்லாகுளம் குற்றப்பிரிவு காவல்துறையினர் சபரி மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN