Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 25 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே செவல்குளம் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் மதிமுக தலைமை நிலைய செயலாளரும், எம்பியுமான துரை வைகோ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது, முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் ஆ.ராசா எம்பி, முதல்வர் ஜோசப் விஜய் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ,
அது விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்றும், நாகரீகமற்ற பேச்சு என்றும் தெரிவித்தார்.
மேலும், அரசியல் எல்லைகளைக் கடந்து அத்தகைய கருத்துக்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, ராஜாஜி மற்றும் அண்ணா அமர்ந்திருந்த முதலமைச்சர் நாற்காலியில் இன்று நாதாரி முதலமைச்சர் அமர்ந்திருக்கிறார் என ஆ.ராசா கூறியதாக வெளியான கருத்து அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam