Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 25 ஜூன் (ஹி.ச.)
கடந்த சில நாட்களாக தனது தோற்றத்தில் காணப்படும் சோர்வு குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது உடல்நிலை குறித்து ரசிகர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
அதில், கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக தான் ஆட்டோ இம்யூன் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த சிகிச்சை மற்றும் மருந்துகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்கவிளைவுகளே முகத்தில் காணப்படும் சோர்வுக்கு காரணம் என்றும், இந்த சிகிச்சை தனது உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது என்றும் கூறியுள்ளார்.
மேலும், ரசிகர்களின் அன்பும் ஆதரவும், தனது பணியின் மீதான அர்ப்பணிப்பும், தற்போது உருவாகி வரும் கட்டா குஸ்தி 2 படத்தின் மீதான பொறுப்புணர்வும் தன்னை தொடர்ந்து உற்சாகமாக செயல்பட வைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
உடல்நல சவால்கள் இருந்தபோதிலும் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது உடல்நிலை விரைவில் குணமடையும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், ரசிகர்கள் காட்டிய அக்கறையும் ஆறுதலான வார்த்தைகளும் தனது உடல்நலத்தை மேலும் கவனித்துக்கொள்ள ஊக்கமளித்துள்ளதாகவும் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
மேலும், தற்போது “கட்டா குஸ்தி 2” படத்தின் இறுதிக்கட்ட புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள அந்தப் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ