பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பதே எந்தவொரு கலைஞருக்கும் மிகப்பெரிய வெற்றி - அக்ஷய் குமார்
புதுடெல்லி, 25 ஜூன் (ஹி.ச.) லோகேஷ் சந்திரா பாலிவுட்டில் நகைச்சுவை திரைப்படங்கள் தமக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளன. இத்தகைய படங்கள் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு அவர்களின் நினைவிலும் நிலைத்திருக்கின்றன.
க


புதுடெல்லி, 25 ஜூன் (ஹி.ச.)

லோகேஷ் சந்திரா

பாலிவுட்டில் நகைச்சுவை திரைப்படங்கள் தமக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளன.

இத்தகைய படங்கள் பார்வையாளர்களைச் சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு அவர்களின் நினைவிலும் நிலைத்திருக்கின்றன.

'வெல்கம்' (Welcome) திரைப்பட வரிசையைப் பொறுத்தவரை, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகவே இருக்கும்.

இப்போது, 'வெல்கம் டு தி ஜங்கிள்'

(Welcome to the Jungle) படத்தின் மூலம், மீண்டும் ஒருமுறை நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கின் விருந்து அமையவுள்ளது.

இப்படத்தில் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, திஷா பதானி மற்றும் அர்ஷத் வார்சி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

'ஹிந்துஸ்தான் சமாச்சார்' (Hindusthan Samachar) உடனான பிரத்யேக உரையாடலில், 'வெல்கம் டு தி ஜங்கிள்' படக்குழுவினர் படத்துடனான தங்கள் சுவாரஸ்யமான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

தங்கள் கதாபாத்திரங்கள், படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் படத்தின் சிறப்பம்சங்கள் குறித்துப் பேசியதுடன், பாலிவுட்டின் மாறிவரும் சூழல், திரையுலகில் உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் நகைச்சுவையின் நுணுக்கங்கள் குறித்தும் அவர்கள் வெளிப்படையாகப் பேசினர்.

கேள்வி :

ஆக்ஷன் முதல் நாடகம் (டிராமா) வரையிலான பல்வேறு வகைப் படங்களில் நீங்கள் உங்கள் அடையாளத்தை நிலைநாட்டியுள்ளீர்கள், இருப்பினும், உங்கள் நகைச்சுவை படங்களுக்கு என்று பார்வையாளர்களிடையே ஒரு தனி மவுசு உள்ளது. இந்தச் சிறப்பான பிணைப்பை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது திரைப்பயணத்தில் ஆக்ஷன், காதல், நாடகம் மற்றும் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட படங்களில் பணியாற்றியுள்ளேன்.

ஆனால் நகைச்சுவைக்கு என்று ஒரு தனி மந்திரம் உள்ளது. ஒரு கதாபாத்திரம் மக்களைச் சிரிக்க வைக்கும்போது, அது அவர்களின் இதயத்தில் இடம்பிடித்து விடுகிறது.

அதனால் தான் எனது பல நகைச்சுவை படங்களின் கதாபாத்திரங்களை மக்கள் இன்றும் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

பல ஆண்டுகளுக்குப் பிறகும் தங்கள் கதாபாத்திரங்களை நினைவுகூரும்போது மக்கள் புன்னகைக்கிறார்கள் என்பதை அறிவதை விட ஒரு கலைஞருக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்.

கேள்வி: 'வெல்கம் டு தி ஜங்கிள்' போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கும் நகைச்சுவை படத்தில் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

பதில்: மிகவும் அற்புதமாக இருந்தது. இத்தனை கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ஒரு தனி மகிழ்ச்சி இருக்கிறது. படப்பிடிப்புத் தளத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதோ ஒன்றை அனுபவிக்க முடிந்தது. பெரும்பாலும், நடிகர்களின் இயல்பான எதிர்வினைகள், திரைக்கதையில் எழுதப்பட்டதை விடவும் அதிக நகைச்சுவையான தருணங்களை உருவாக்கின. அதுதான் நகைச்சுவையின் மிகப்பெரிய அழகு. படப்பிடிப்பின் போது நாங்கள் உணர்ந்த அதே ஆற்றலையும் பொழுதுபோக்கையும் பார்வையாளர்களும் இப்படத்தில் உணர்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,என்றார்

என்னைத் தொடர்ந்து உரையாடிய சுனில் ஷெட்டி கூறியது,

கேள்வி: 90-களின் திரைப்படத் துறைக்கும் இன்றைய சூழலுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

பதில்: காலப்போக்கில் மாற்றங்கள் வருவது இயல்புதான்,

ஆனால், அக்காலத்தில் திரைத்துறையினரிடையே ஒருவிதமான நெருக்கமான பிணைப்பு இருந்ததாக நான் உணர்கிறேன். ஒரு படத்தின் முதல் காட்சி திரையிடப்படும்போதெல்லாம், கிட்டத்தட்ட ஒட்டுமொத்தத் திரையுலகினரும் அங்கு இருப்பார்கள். கலைஞர்கள் ஒருவருக்கொருவர் வெற்றியை மனதாரக் கொண்டாடுவார்கள். இன்று, சமூக ஊடகங்களும் டிஜிட்டல் உலகமும் பல விஷயங்களை மாற்றிவிட்டன. பெரும்பாலும், திரைப்படங்களை விட ஒருவரின் டிஜிட்டல் செயல்பாடுகளே அதிக விவாதப் பொருளாகிவிடுகின்றன. இது காலத்தின் கட்டாயமாக இருந்தாலும், திரைத்துறையில் அந்த 'குடும்பம்' போன்ற உணர்வும் பரஸ்பர நட்புறவும் மீண்டும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி: புதிய தலைமுறை கலைஞர்கள் அந்தக்காலத்திலிருந்து ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா? பதில்: நிச்சயமாக. கடின உழைப்பும் திறமையும் எப்போதும் அவசியமானவை,ஆனால், உறவுகளுக்கு மதிப்பளிப்பதும் அதே அளவு முக்கியம். கலைஞர்கள் ஒருவரையொருவர் மதித்துத் துணையாக நிற்கும்போது, ஒட்டுமொத்தத் துறையும் வலுவடைகிறது. எதிர்காலத்தில் இந்த உணர்வு மேலும் வலுப்பெறும் என்று நம்புகிறேன்.

திஷா பதானி கூறியது,

கேள்வி: 'வெல்கம் டு தி ஜங்கிள்'

(Welcome to the Jungle) உங்கள் முதல் முக்கியமான நகைச்சுவைப் படமாகக் கருதப்படுகிறது. இந்தப் பாணியிலான படத்தில் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

பதில்: இது எனக்கு ஒரு புதிய மற்றும் மிகவும் சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. வெளியில் பார்ப்பதை விட, நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்துவது உண்மையில் மிகவும் கடினமானது. வெறும் வசனங்களைப் பேசுவது மட்டும் போதாது; முகபாவனைகள், உடல் மொழி மற்றும் சரியான நேரத்தில் எதிர்வினையாற்றுவது ஆகியவை மிக முக்கியம். மிகுந்த அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் பணியாற்றியதால் ஆரம்பத்தில் எனக்குச் சற்று பதற்றமாக இருந்தது; ஆனால், படக்குழுவினர் அனைவரும் என்னை மிகவும் இயல்பாக உணர வைத்தனர்.

கேள்வி: படப்பிடிப்புத் தளத்தில் உங்களுக்கு யார் அதிகம் உதவினார்கள்? பதில்: இயக்குனர் அகமது சார் முக்கியப் பங்காற்றினார். அவர் நடிகர்களுக்குச் சுதந்திரமாகப் பணியாற்றும் வாய்ப்பை அளிக்கிறார். அதுமட்டுமின்றி, சக நடிகர்கள் அனைவரும் மிகுந்த ஆதரவை அளித்தனர். படப்பிடிப்பின் போது நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல மாறிவிட்டோம். அர்ஷத் வார்சி சார் மற்றும் பிற நடிகர்களுடன் பணியாற்றியபோது நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். படப்பிடிப்பின் போது அடிக்கடி வேடிக்கையான சம்பவங்கள் நடந்தன; அப்போது சிரிப்பை அடக்குவதே கடினமாக இருந்தது.

கேள்வி: இந்தப் படத்தில் உங்கள் கதாபாத்திரத்திடமிருந்து ரசிகர்கள் எதை எதிர்பார்க்கலாம்?

பதில்: ரசிகர்கள் என்னை முற்றிலும் மாறுபட்ட ஒரு தோற்றத்தில் காண்பார்கள் என்றுதான் சொல்வேன். இந்தக் கதாபாத்திரம் எனக்கே கூடப் புதிதுதான்; மக்கள் இதை விரும்புவார்கள் என்று நம்புகிறேன். இப்படம் பொழுதுபோக்கு, நகைச்சுவை மற்றும் பல ஆச்சரியங்களை வழங்குகிறது.

கேள்வி: படப்பிடிப்புத் தளத்தில் அதிகம் குறும்புகள் செய்பவர் யார்? அக்ஷய் குமார் (சிரித்துக்கொண்டே), 'அண்ணா'—அதாவது சுனில் ஷெட்டி—வெளியே பார்ப்பதற்கு அமைதியானவராகத் தெரிந்தாலும், உண்மையில் அவர் அப்படிப்பட்டவர் அல்ல. மற்றவர்களை வைத்து வேடிக்கையான குறும்புகளைச் செய்வதற்கான யோசனைகளை அவர் எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருப்பார்.

உங்கள் செருப்புகளை எங்காவது சாதாரணமாகக் கழற்றி வைத்துவிட்டால், அவை மீண்டும் உங்களுக்குக் கிடைக்காமலே போகலாம். பெரும்பாலும், அந்தக் குறும்புகளுக்கான திட்டத்தை அவரே வகுப்பார்; ஆனால் அவற்றைச் செயல்படுத்தி முடிக்கும் வேலையை எங்களைப்போன்ற மற்றவர்களிடமே ஒப்படைப்பார்,

என்றார்,

Hindusthan Samachar / Durai.J