அம்மோனியா கசிவுக்கு காரணமான நிறுவனம் நிரந்தரமாக மூட பரிந்துரை - இன்று இறுதி அறிக்கை தாக்கல்
தமிழ்நாடு, 25 ஜூன் (ஹி.ச.) அம்மோனியா விஷவாயு கசிவு சம்பவத்திற்கு காரணமான கடல் உணவுகள் ஏற்றுமதி நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அமைத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அம்மோனியா கசிவு
அம்மோனியா கசிவு


தமிழ்நாடு, 25 ஜூன் (ஹி.ச.)

அம்மோனியா விஷவாயு கசிவு சம்பவத்திற்கு காரணமான கடல் உணவுகள் ஏற்றுமதி நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அமைத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்மோனியா கசிவு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சம்பவத்தின் காரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை ஏற்கனவே முதலமைச்சர் விஜய்யிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஷவாயு கசிவுக்கு காரணமான கடல் உணவுகள் ஏற்றுமதி நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற முக்கிய பரிந்துரையை நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையில் இடம்பெறச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, 24 மணி நேரத்திற்குள் இடைக்கால அறிக்கையையும், மூன்று நாட்களுக்குள் இறுதி அறிக்கையையும் சமர்ப்பிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நிபுணர் குழுவினர் இன்று தமிழக அரசிடம் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர்.

இறுதி அறிக்கையின் பரிந்துரைகள் அடிப்படையில் அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam