Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 25 ஜூன் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் இலவச தரிசனத்தில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 70 ஆயிரத்து 139 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அவர்களில் 34 ஆயிரத்து 940 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
பக்தர்கள் ஒரே நாளில் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியே 63 லட்சமாக பதிவாகியுள்ளது.
மேலும், கோவிலில் 3.44 லட்சம் லட்டுகள் விற்பனையாகின. அன்னபிரசாதம் பெற்ற பக்தர்களின் எண்ணிக்கை 2.05 லட்சமாக இருந்ததாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA