மங்களகிரி எதிர்காலத்தில் முக்கிய கிரிக்கெட் மையமாக உருவெடுக்கும் - ராம் சரண்
மங்களகிரி , 25 ஜூன் (ஹி.ச.) ஆந்திர பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டி நடைபெறவிருந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் ராம் சரண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அவர் ஏபிஎல் கோப்பை மற்றும் அணிகளின் ஜெர்சிகளை வெளியிட்டு,
A


மங்களகிரி , 25 ஜூன் (ஹி.ச.)

ஆந்திர பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டி நடைபெறவிருந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் ராம் சரண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அவர் ஏபிஎல் கோப்பை மற்றும் அணிகளின் ஜெர்சிகளை வெளியிட்டு, டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் உரையாற்றுகையில்,

ஸ்டேடியம் அனைத்தும் சர்வதேச தரத்திற்கு இணையாக மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்டேடியத்தில் உள்ள நவீன வசதிகள் உலகத் தரத்தில் அமைந்துள்ளன என்றும், இத்தகைய கட்டமைப்புகள் ஆந்திராவில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மங்களகிரி எதிர்காலத்தில் முக்கிய கிரிக்கெட் மையமாக உருவெடுக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இப்போட்டியில் டாஸ் வென்ற காபிடல் அமராவதி ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. போட்டியை காண ரசிகர்கள் அதிகளவில் திரண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திர கிரிக்கெட் சங்கம்

ஆந்திர கிரிக்கெட் அசோசியன்

தலைவர் கே. சிவநாத், செயலாளர் சானா சதீஷ் மற்றும் மத்திய அமைச்சர் பூபதிராஜு ஸ்ரீநிவாச வர்மா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA